2025 மே 08, வியாழக்கிழமை

யாழ்.இளைஞர்களும் நாடாளுமன்றம் வரவேண்டும்’

Gavitha   / 2020 நவம்பர் 08 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னைப் போன்றே, வடக்குப் பகுதிகளில் இருந்தும், இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு, அமைச்சர்களாகி, வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என, இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்.மாவட்ட தலைமை காரியாலயத்தை, நேற்று இன்று (08) திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 30 வருட யுத்தம் காரணமாக, வடக்கு இன்னும் அபிவிருத்தி அடையாமல் உள்ளது என்றும் எனினும், எனினும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் தற்போது நாட்டில் சுதந்திரம் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் வடபகுதியில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது என்றும் இதற்கு, விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்பந்தாட்டம், கிரிக்கெட் விளையாட்டுகளுக்கு மைதானங்கள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளன என்றும் அதே போன்று சர்வதேச ரீதியில் விளையாடுவதற்காக வடக்கிலிருந்தும் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே தங்களது ஆர்வம் என்றும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X