2025 மே 14, புதன்கிழமை

’யாழ். கத்தோலிக்க தேவாலயங்களில் வழிபாடுகள் இடம்பெறாது’

Editorial   / 2020 மார்ச் 17 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில், நேற்று முதல், மறு அறிவித்தல் வரை வழிபாடுகள் இடம்பெறாதென்று,  கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ்ப்பாணம் குருமுதல்வர் ஜோசப் தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலை காரணமாக அதனைக் கட்டுப்படுத்துவதற்கு, நாட்டில் முன்னெடுக்கும் தேசிய திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், அவர் கூறினார்.

அதனால், கத்தோலிக்க பெருமக்கள் தமது வீடுகளிலிருந்து வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X