Niroshini / 2021 ஜூன் 02 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
ஜனாதிபதி விசேட அனுமதியின் கீழ், யாழ். பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு, இன்றைய தினம் (02) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கும் பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்களில் உள்ள 500 பேருக்குமாக மொத்தமாக 2100 கொரோனா பேருக்கு, தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி விசேட உத்தரவை வழங்கியுள்ளதன் அடிப்படையில், இன்று காலை, யாழ் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோஃபார்ம் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைய இன்றும் நாளையும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா, தடுப்பூசி ஏற்றி, தடுப்பூசி ஏற்றும் பணியை ஆரம்பித்து வைக்க, பல்கலைக்கழகத்தின் ஏனைய பணியாளர்கள் தாமாக முன்வந்து, தமக்குரிய தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதை காணக்கூடியதாக இருந்தது.
30 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
9 hours ago