2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கை

Freelancer   / 2024 ஜனவரி 06 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த் 

யாழ்ப்பாண பல்கலைக்கழக  சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்த வேண்டும் என மாணவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகளுக்கும்,  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையேயான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றது. 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா ஆகியோரும் அக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலில், மாணவர்களினால், மாணவ விடுதிகளில் உள்ள குறைபாடு, முகாமைத்துவ பீடத்திற்கான பேருந்து வசதிகளை ஏற்படுத்தல், சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்தல், இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களுக்கான உள்ளக பயிற்சி வழங்குதல் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டது.

இக் கலந்துரையிடாலில் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 37 மாணவர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X