Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாண மாநகர சபைக்கு இவ்வருடம் அதிக நிதி நெருக்கடி நிலைமை காணப்படுவதாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளன் தெரிவித்தார்.
இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக, யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான சுமார் 349 கடைகளுக்கான இரண்டு மாத வாடகை சலுகை, சபை அனுமதியோடு விலக்களிப்பு அளிக்கப்பட்டுள்ளதென்றார்.
மேலும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இம்முறை நல்லூர்க் கந்தன் கோவில் உற்சவ காலத்தில், தற்போதைய கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்த அவர், இதன் காரணமாக மாநகர சபைக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதெனவும் கூறினார்.
“நல்லூர் கோவில் உற்சவத்தின் போது, யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு வருடாந்தம் 15 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கின்ற போதும், சபை ரீதியான செயற்பாடுகளுக்காக சுமார் 70 இலட்சம் செலவு செய்யப்படுவது வழமை .
“எனினும் இந்த முறை நல்லூர் உற்சவ காலத்தில், அனைத்து செலவுகளையும் சபையே பொறுப்பேற்க வேண்டிய நிலை காணப்பட்டது” எனவும், லோகதயாளன் தெரிவித்தார்.
ஏனைய துறைகளை எடுத்துக்கொண்டால், சந்தை வருமானம் போன்ற ஏனைய வருமானங்களும், கொரோனா தொற்று அச்சம் காரணமாக குறைந்தளவாகவே சபைக்குக் கிடைத்துள்ளனவெனவும், அவர் கூறினார்.
இதனால், இவ்வாண்டு பெரும் நிதி நெருக்கடியை, தமது மாநகரசபைக்கு ஏற்படுத்தியுள்ளதெனத் தெரிவித்த அவர், இதன் தாக்கம் எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் தான் வெளிப்படுமெனவும் கூறினார்.
இது தொடர்பில் மாநகர சபை மேயர் உள்ளிட்ட ஏனைய தரப்பினருடனும் ஆராய்ந்து, நிர்வாக ரீதியான முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் அத்துடன், இதற்கு மேலதிகமாக, ஏதாவது நிதி மூலங்களைத் தேடுவதா அல்லது நிலையான சேமிப்பில் இருக்கிற பணத்தை எடுத்து செலவழிப்பதா என்பது தொடர்பில் விரைவில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போமெனவும் கூறினார்.
14 minute ago
20 minute ago
36 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
36 minute ago
42 minute ago