Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
- என். ராஜ்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மூன்று வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.
வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்டினால் இம்மாதம் இரண்டாம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்தச் சமர்ப்பணத்தின் போது, அதற்கு ஆதரவாக 19 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டு முதலாவது வாசிப்பு தோற்கடிக்கப்பட்டிருந்தது.
ஆனோல்ட் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு இடம்பெற்றது.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவரும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு - செலவுத் திட்டத்திக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு - செலவுத் திட்டத்திக்கு எதிராக வாக்களித்தனர்.
14 minute ago
14 minute ago
27 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
14 minute ago
27 minute ago
40 minute ago