Niroshini / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், மூன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், இன்றைய தினம் (15), மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணனினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களை அடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில், வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக, மேயர் அணியை சேர்ந்த 10 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 11 உறுப்பினர்களும் சுதந்திரக் கட்சியை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்த உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 2 உறுப்பினர்களும் என 21 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
இதற்கமைய, யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், 3 மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டது.
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025