2025 மே 02, வெள்ளிக்கிழமை

யாழ். மாநகர சபை சுகாதார ஊழியர்கள் போராட்டம்

Niroshini   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

-என்.ராஜ்

பிங்கர்பிறிண்ட் இயந்திரம் பழுதாகியுள்ளமையால் அதனைச் சீர் செய்யவேண்டும் என்று தெரிவித்து, ஒவ்வொரு ஊழியர்களின் வேதனத்தில் இருந்தும் 1,000 ரூபாய் கழிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்.மாநகர சபை ஊழியர்கள், நேற்று கவனீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டம், யாழ்.மாநகர சபைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.

2013ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட குறித்த இயந்திரம், அண்மையிலேயே பொருத்தப்பட்டதாகவும் அது தற்போது செயலிழந்துள்ளதாகவும் தெரிவித்த அவர்கள், அதனை திருத்துவதற்காக 300 ஊழியர்களிடம் இருந்து தலா 1,000 ரூபாய் கழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த இயந்திரத்தை அனைத்து ஊழியர்களும் பயன்படுத்துவதால், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாகவும், ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X