2025 மே 07, புதன்கிழமை

’யாழ். வைத்தியசாலையில் ஒக்சிசன் தட்டுப்பாடு’

Niroshini   / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம். றொசாந்த்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிசன்  தட்டுப்பாடு காணப்படுவதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா  தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில், இன்று (03)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது,அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்

தொடர்ந்துரைத்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 90 வரையான ஒக்சிசன்  சிலிண்டர்கள் இதுவரை பாவிக்கப்பட்டு வந்ததாகவும் எனினும் தற்போது  கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக குறித்த சிலிண்டர் பாவனை 180க்கும் மேல்  அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

 ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து வாகனங்கள் அனுராதபுரம் சென்று சிலிண்டர்கள் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

 எனவே, பொதுமக்கள் தற்போதுள்ள நிலையை அனுசரித்து அனைவரும் செயற்படுவதன் மூலம் குறித்த தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X