2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூற நினைவுச்சின்னம் வேண்டும்

Princiya Dixci   / 2015 நவம்பர் 04 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- குணசேகரன் சுரேன்

யுத்தத்தில் இறந்தவர்களை அவர்களது உறவுகள் நினைவு கூறுவதற்கு நினைவு சின்னமொன்று வடமாகாணத்தில் அமைக்கப்பட்டு, நினைவு கூறுவதற்கு ஒரு திகதியும் ஏற்படுத்தப்படவேண்டும் என நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை முன்வைக்கவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

'யுத்தத்தில் இறந்தவர்களை, அவர்களது உறவுகள் நினைவுகூர முடியாத நிலையுள்ளது. அதனை மாற்றி, அவர்களுக்கு பொதுவான நாளொன்றில் நினைவு கூறுவதற்கு சந்;தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரேரணையை முன்வைக்கவுள்ளேன்' என்றார்.

'அத்துடன், வடமாகாணத்திலுள்ள யுத்தப் பாதிப்பு அடையாளங்களை அகற்றுமாறு கோரியும் பிரேரணையொன்றை முன்வைக்கவுள்ளேன். கிளிநொச்சியில் காணப்படும், உடைந்த நீர்த்தாங்கி, ஆனையிறவில் காணப்படும் யுத்த தாங்கி போன்ற யுத்த அடையாளங்களை அகற்ற வேண்டும் என இந்த பிரேரணை அமையவுள்ளது. யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தச அடையாளங்கள் மனதளவில் கஷ்டங்களைக் கொடுக்கும். அவற்றை அங்கிருந்து அகற்றி அந்த இடங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ, தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருந்திருந்தால், அவற்றையெல்லாம் உடனடியாக என்னால் செய்திருக்க முடியும். தற்போது, முன்வைக்கப்படும் பிரேரணை நான் தனியாக முன்வைப்பதால், அதற்கான ஆதரவு கிடைக்குமா என்பது தெரியவில்லை' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .