Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 பெப்ரவரி 17 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
யாழ்.பல்கலைக்கழக தாவரவியல்துறையும் கொழும்பு பல்கலைக்கழக தாவரவியல்த்துறையும் இணைந்து ஆரம்பித்துள்ள மரநடுகைத்திட்டம், இன்று வெள்ளிக்கிழமை (17), யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
இயற்கையின் காலநிலை மாற்றம் வெகுவாக தற்போது மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அதனை சமப்படுத்தும் நோக்கிலும் இயற்கைக்கும் மாணவர்களுக்கம் இடையில் ஓர் உறவு முறையை பேணும் வகையிலும் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 1,000 மரக்கன்றுகள் யாழ் மாவட்டத்தில் நாட்டப்படுகின்றன. இன்றையதினம் யாழ் மாவட்டத்திலுள்ள வடமராட்சி, தீவகம், காங்கேசன்துறை வீதி ஆகிய மூன்று பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 9 பாடசாலைகளில், பல்கலைக்கழக மாணவர்கள் குழுக்களாக பிரிந்து இத்திட்டத்தை செயற்;படுத்தவுள்ளனர்.
இதன்முதல் கட்டமாக யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில,; விருந்தினர்களால் மரநடுகை நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக பதில் துணை வேந்தர் பேராசிரியர் ஜி.மிகுந்தனும் விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டனர்.
மேலும், கொழும்பு பல்கலைக்கழக தாவரவியல் துறை பேராசிரியர் டபிள்யூ.பி.யாபா, யாழ். பல்கலைக்கழக தாவரவியல்துறை தலைமை பேராசிரியர் கலாநிதி திருமதி ஆர்.யஞானேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago