2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப பாடம் ஆரம்பம்

Niroshini   / 2016 மார்ச் 21 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

'உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்ப பாடம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பிக்கப்படவுள்ளது' என கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் இன்று திங்கட்கிழமை (21) தெரிவித்தார்.

'கடந்த 18ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கையடுத்தே, தொழில்நுட்ப பாடநெறியை ஆரம்பிப்பதற்கான அனுமதியை அமைச்சர் வழங்கியிருந்தார்.

இதனையடுத்து, 2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரத்தில் தோற்றவுள்ள மாணவர்களில், தொழில்நுட்ப பாடத்தை பயில விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன' என்றார்.

'இதனால், இதுவரை காலமும் தொழில்நுட்ப பாடத்துக்காக வேறு பாடசாலைக்கு மாற்றலாகிச் சென்ற மாணவர்கள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் தொடர்ந்து கல்வி கற்கக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது' என அதிபர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X