Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 மார்ச் 01 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.நேசமணி
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, கடந்த 6 வருடங்களாக கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முருகையா கோமகன், வவுனியா நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (29) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மாநகர சபை உறுப்பினராக இருந்தபோது, கடந்த 2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி ஒருவரது வழிகாட்டலில், முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளிதரன் (கருணா) குழு உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாக கூறி, இவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இவருக்கு எதிரான வழக்கு வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்றது. தனது விடுதலையை வலியுறுத்தி இவர் பல தடவைகள், மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டங்களிலும் ஈடுபட்டார்.
வவுனியா நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து, நீதிமனறம் இவரை திங்கட்கிழமை விடுதலை செய்தது.
15 minute ago
36 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
36 minute ago
1 hours ago
2 hours ago