2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

யாழ். மாவட்ட செயலகத்துக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ். மாவட்டச் செயலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டபோது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மாவட்டச் செயலகத்துக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பதில் கூற வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், தொடர்ந்தும் காணிகள் ஆக்கிரமிப்பது நிறுத்தப்பட வேண்டும், இனப் படுகொலைக்கு நீதி வேண்டும் மற்றும் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X