2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

யாழ். மாவட்ட செயலகத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஸன்

யாழ்.மாவட்ட செயலகத்தை சுற்றிப் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், மாவட்ட செயலகத்தைச் சூழவுள்ள வீதிகள் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டச் செயலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டபோது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஐpலிங்கம் தலைமையில் மாவட்டச்செயலகத்தின் அருகில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இப்போராட்டத்தையடுத்தே, மாவட்டச் செயலகத்துக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

"குறித்த போராட்டத்துக்கு இடையூறு விளைவித்தோ அல்லது அதனைத் தடுத்தாலோ போராட்டம் அமைதியான முறையில் நடைபெறாது. அதுவொரு எழுச்சிப் போராட்டமாகவே நடைபெறும். இதேவேளை, கந்த 2002ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றிலேயே யாழ். மாவட்டத்தில் தான் தேசியக் கொடி பறக்காது கறுப்புக் கொடி பறந்திருந்தது. ஆகவே, நடைபெறவிருக்கின்ற இந்தப் போராட்டத்திலும் எமக்கு இடையூறு விளைவித்தோ அல்லது தடுத்தோ அந்த நிலைக்குத் தள்ளாதீர்கள்" என கடந்த 2ஆம் திகதி, சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X