2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

யாழில் நாளை கறுப்புப்பட்டி போராட்டம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 03 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஸன்

இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம், நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக, மாபெரும் கறுப்புப்பட்டிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 

யாழ். ஊடக அமையத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,  

“இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. ஆனால், எமது மக்கள் பல்வேறு பிரச்சினைகளையும், தொடர்ச்சியான பாதிப்புக்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். தற்போதும் அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன. 

இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூற வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், தொடர்ந்தும் காணிகள் ஆக்கிரமிப்பது நிறுத்தப்பட வேண்டும், இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் மற்றும் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற, ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தே, இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.  

காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மிகவும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்கள், கைதிகள் மற்றும் காணாலாக்கப்பட்டோர்களது உறவினர்கள் என, பல தரப்பினர், ​கலந்துகொள்ளவுள்ளனர்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X