2025 ஜூலை 19, சனிக்கிழமை

யாழில் பொங்கல் தின நிகழ்வு

Niroshini   / 2016 ஜனவரி 06 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்துள்ள தேசிய தைப்பொங்கல் தின விழா நிகழ்வுகள் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை  யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜ.தவேந்திரன் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற  யாழ்ப்பாண மாவட்ட காரியாலயத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் வடமாகாண சபை ஆகியன இணைந்து  பொங்கல் விழாவின் தார்ப்பரியத்தை மூவின இளைஞர் யுவதிகளுக்கும் தெழிவுபடுத்தும் முகமாக மாதிரி பொங்கல் விழாவினை எதிர்வரும் 10ஆம் திகதி வட்டுக்கோட்டை யாழ்ப்பாண தொழில்நுட்ப்பக் கல்லூரியில் நடத்த தீர்மானித்துள்ளோம்.

வித்தியாசமான ஒரு நிகழ்வாக இந்த நிகழ்வை நடத்தும் முகமாக சிங்களம், தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகள் 450 பேர் 24 மாவட்டங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்டு காலியிலிருந்து விசேட புகையிரத்தின் ஊடாக அவர்களை மாவட்டங்கள் தோறும் அழைத்து வந்து வெள்ளிக்கிழமை(09) நண்பகல் வேளையில் யாழ்ப்பாணத்துக்கு இழைத்து வரவுள்ளோம்.

வருகின்ற இளைஞர், யுவதிகளை யாழ்ப்பாணத்தை சேர்ந்த 300 இளைஞர்கள் புகையிரத நிலையத்தில் வரவேற்று பின்னர் யாழ்.மாவட்டத்தின் பத்து பிரதேச செயலக பிரிவுகளில் தமிழ் இளைஞர், யுவதிகளின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டு அடுத்த நாள் வருகின்ற 750 இளைஞர்களையும் 10 குழுக்களாக பிரித்து முறைப்படியான பொங்கல் செய்பவர்களுக்கான போட்டி மற்றும் பாரம்பரிய போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன்,100 வறுமைக்கோட்டுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்படவுள்ளதோடு 50 பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களும்  புத்தகங்களும் வழங்கிவைக்கப்படவுள்ளன.

மாலை நான்கு மணியிலிருந்து பாரம்பரிய கலை நிகழ்வுகளும் பரிசில் வழங்கும் வைபவமும் நடைபெற்று, இரவு இசை நிகழ்வும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X