2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

யாழில் போராட்டம்

Menaka Mookandi   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

கேப்பாப்புலவு மற்றும் வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு ஆதரவு தெரிவித்தும் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய பதில்களை வழங்குமாறு வலியுறுத்தியும், யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் கிராமிய உழைப்பாளர் சங்கமும் இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தில், பொது அமைப்புக்கள் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த அமைப்புக்கள் கலந்துகொண்டன.

'கேப்பாப்புலவு மக்களின் வாழ்விடங்கள், எந்த நிபந்தனை இன்றியும் தாமதமின்றியும் வழங்கப்பட வேண்டும்', 'வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் எப்போது?' 'காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முடிவு என்ன? 'அரசே பதில் சொல்!' 'அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது? நல்லாட்சியின் போலி முகமே பதில் சொல்', 'மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம். இராணுவமே மக்களின் நிலங்களை விட்டு வெளியேறு' போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X