Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மார்ச் 07 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வடமாகாண சுகாதார அமைச்சின் மகளிர் விவகார பிரிவினரின் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள், புதன்கிழமை(09) பிற்பகல் 2 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் 'நிலையான எதிர்காலத்துக்கு வலுவான பெண்கள்' எனும் தலைப்பில் கோகிலா மகேந்திரனும் 'பெண்கள்' என்ற தலைப்பில் பி.எஸ்.அஜிதாவும் சிறப்புரையாற்றவுள்ளனர்.
அத்துடன், மகளிர் விவகாரக் குழுவினரால் நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் வெற்றியீட்டிய குறுடம்படங்கள் திரையிடப்படுவதுடன் வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் ஆகியோரும் கௌரவ விருந்தினராக யாழ். இந்தியத் துணைத்தூவர் ஆ.நடராஜனும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .