2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

யுவதியை கடைக்குள் வைத்துப் பூட்டிய உரிமையாளர்

Niroshini   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கடையில் கணக்குப் பார்க்கும் யுவதி கணக்கில் தவறு விட்டமைக்காக அவரை வீட்டுக்குச் செல்லவிடாமல் கடைக்குள் வைத்து உரிமையாளர் பூட்டிய சம்பவமொன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது.

திருநெல்வேலி சந்தியிலுள்ள கடையொன்றில் கணக்காளராக பணியாற்றி வரும் குறித்த யுவதி, கணக்குப் பார்க்கும் போது, 3 இலட்சம் ரூபாய் பணத்துக்கான கணக்கை தவறவிட்டதையடுத்து, ஆத்திரம் கொண்ட உரிமையாளர், யுவதியை கடைக்குள் வைத்துப் பூட்டியுள்ளார்.

இரவு நேரம் ஆகியும் தனது மகள் வீடு திரும்பாததையடுத்து கடைக்குச் சென்ற தாயார், கடையின் மேல் மாடியிலிருந்து தனது மகளின் குரல் கேட்டதையடுத்து அங்கு நின்றுகொண்டிருந்த இளைஞர்களின் உதவியுடன் கடையை முற்றுகையிட்டார்.

இளைஞர்கள், கடைக்குள் செல்ல முற்பட்ட வேளையில், கடை உரிமையாளர் அடைத்து வைத்திருந்த யுவதியை விடுவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .