2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ரயிலிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலிலிருந்து தவறி விழுந்து 53 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளாரென யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், புங்கன்குளம் ரயில் நிலையத்தில் இன்று (31) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்துச் சம்பவத்தில், ஆசீர்வாதப்பர் வீதிப் பகுதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன் என்பவரே உயிரிழந்தவராவார்.

உயிரிழந்தவரின் மனைவி, தமிழ் பாட பிரபல ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

சடலம், யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X