2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ரயில் மோதி வயோதிபர் பலி

Princiya Dixci   / 2016 மே 23 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் பகுதியிலுள்ள பாதுகாப்பான ரயில் கடவையில் இன்று திங்கட்கிழமை (23) ரயில் மோதி 70 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில் வருவதற்காக கடவை மூடப்பட்டிருந்த நிலையில், மேற்படி வயோதிபர், கடவையின் கீழாக குனிந்து ரயில் பாதையைக் கடக்க முற்பட்ட போது, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது.

உயிரிழந்தவர், இன்னமும் அடையாளங் காணப்படவில்லையெனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X