2025 ஜூலை 19, சனிக்கிழமை

ரயிலில் மோதி காவலாளி பலி

Niroshini   / 2016 ஜனவரி 07 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பாதுகாப்பு கடவையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்ட காவலாளி ஒருவர், ரயிலில் மோதுண்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவமொன்று உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேத்தாவாடி, மதுரங்குளம் பகுதியில் புதன்கிழமை(06) இரவு இடம்பெற்றுள்ளது.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி இரவு 10 மணிக்கு பயணித்த புகையிரதத்திலேயே குறித்த காவலாளி மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

புதுக்கமம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தேத்தாவாடி, மதுரங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான நாகலிங்கம் சிவகுமாரன்(வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேத்தாவாடி, மதுரங்குளம் பகுதியில் அமைந்துள்ள புகையிரத வீதி பாதுகாப்புக் கடவையில் காவலாளியாக கடமையில் ஈடுபட்டு வந்த குறித்த நபர், சம்பவத்தினத்தன்று குறித்த புகையிரத பாதுகாப்புக் கடவைக்கு அருகில் உறங்கியுள்ளார். இதன்போதே, புகையிரதம் குறித்த காவலாளியை மோதியுள்ளது.

குறித்த புகையிரத கடவையில் கடந்த காலங்களில் பொலிஸார் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, பொலிஸாரினால் தனி நபர் ஒருவர் காவலாளியாக குறித்த புகையிரத பாதுகாப்புக் கடவையில் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X