Freelancer / 2022 டிசெம்பர் 02 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் முதல் முறையாக வங்கியியலும் நிதியும் டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.
வங்கி மற்றும் நிதித் துறைகளில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும், இத் துறைகளில் இணைய விரும்புவோருக்கும் அடிப்படை அறிவினையும், அங்கீகரிக்கபட்ட தராதரத்தையும் வழங்கும் நோக்குடன் இது ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த டிப்ளோமா கற்கை நெறியின் உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வுயாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில், துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் சனிக்கிழமை (03) காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தக் கற்கை நெறியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் ஊடாக நடாத்துவதற்கான ஏற்பாடுகளை முகாமைத்துவ கற்கைகள் வணிகபீடம் மேற்கொண்டுள்ளது.
3 hours ago
9 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
09 May 2026