2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வங்கியில் வழங்கிய பணம் போலி: பெண் முறைப்பாடு

Gavitha   / 2016 ஜூன் 23 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

' மானிப்பாய் பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றினால் தனக்கு வழங்கப்பட்ட 2 இலட்சம் ரூபாய் நாணயத்தாள்கள் போலியானது' என்று கூறி, இளவாலை பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவர் இன்று வியாழக்கிழமை (23) முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

இளவாலை, பனிப்புலம் பகுதியைச் சேர்ந்த மேற்படி பெண் ஆனைக்கோட்டையிலுள்ள தனது தங்கையின் திருமணத்துக்காகச் சென்றுள்ளார். இதன்போது ஏற்பட்ட அவசர பணத்தேவை காரணமாக, தனது தாலிக்கொடியை மானிப்பாயிலுள்ள தனியார் வங்கியொன்றில் புதன்கிழமை (22) அடகு வைத்து, 4 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.

பின்னர் வீட்டுக்குச் சென்ற பெண் தனக்கு வழங்கிய பணத்தை கணக்கு பார்க்கும் போது, அதிலிருந்த 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 40 தாள்கள் போலியானதாக இருந்தது என்று கூறியே இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

குறித்த பெண், முறைப்பாட்டில் உண்மைக் கூறியுள்ளாரா இல்லை பொய் கூறியுள்ளாரா என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X