2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘வடக்கில் பஸ் சேவைகள் ஆரம்பம்’

Editorial   / 2020 மே 21 , மு.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

இன்றைய தினத்தில் (21) இருந்து, மட்டுப்படுத்தப்பட்ட அளவில், தனியார் போக்குவரத்து சேவை பஸ்கள், சேவையில் ஈடுபடவுள்ளதாக, வடக்கு மாகாண இலங்கை தனியார் பஸ்  உரிமையாளர் சங்கத் தலைவர் சி.சிவபரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக போக்குவரத்துச் சேவைகள் யாவும் தடைப்பட்டிருந்தப் பின்னர், வியாழக்கிழமை (21) மட்டுப்படுத்தப்பட்ட அளவில், பஸ் சேவையை மாகாணத்துக்குட்பட்டு நடத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.

வடக்கு மாகாணப் பயணிகள்  போக்குவரத்து அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய, சுகாதார நடைமுறையைப் பின்பற்றி, ஆசன இருக்கைகளுக்கு அமைவாக, இந்தப் பயண சேவைகள் யாவும், வியாழக்கிழமையில் (21) இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற உள்ளதாகவும், சிவபரன் கூறினார்.

குறிப்பாக பஸ்ஸில் பயணம் செய்யும் பொது மக்கள், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அதாவது, கைகளுக்குக் கையுறைகளை அணிந்து, முகக் கவசங்கள் கட்டாயமாக அணிந்து வந்தால் மாத்திரமே,  பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்களெனவும், அவர் தெரிவித்தார்.

மேலும், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர்கள், சாரதிகள் நடத்துனர்களாக சுமார் 3,500க்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் எனினும், பொதுமக்களின் நலன் கருதியே, வியாழக்கிழமையில் (21) இருந்து குறித்த சேவையை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X