Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2020 நவம்பர் 09 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
வடக்கு, கிழக்கு, வடமத்திய ஆகிய மாகாணங்களில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, யாழ்ப்பாணம் பிராந்திய வளிமண்டல ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய காலநிலை மாற்றம் தொடர்பில் இன்று (09) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதென்றார்.
மேல், சப்ரகமுவா, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதெனவும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுமெனவும் கூறினார்.
'அத்துடன், நாட்டை சூழவுள்ள கடற்பரப்புககளில் காற்றானது வடகிழக்கு திசை நோக்கி வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25 தொடக்கம் 35 வரை கிலோ மீற்றர் வரை காணப்படும்.
'கொழும்பிலிருந்து புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
'குறித்த பகுதிகளின் கடற்பரப்பு அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்' எனவும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago