2025 மே 07, புதன்கிழமை

’வடக்கு மக்களின் மனங்களை நன்கறிவேன்’

Niroshini   / 2021 ஜூலை 13 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

வடக்கு மாகாணத்தில், சட்டம் ஒழுங்கை முறையாக நடைமுறைப்படுத்தி, மக்களுக்கு உயரிய சேவையை வழங்குவேன் என்று, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார தெரிவித்தார்.

அத்துடன், யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே கடமையாற்றியுள்ளதால், வடக்கு மக்களின் மனங்களை நன்கறிவேன் என்றும், அவர் கூறினார்.

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட  ஜெகத் பளிகக்கார,  
காங்கேசன்துறையில் உள்ள மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் வைத்து,  இன்று (13) காலை 8.30 மணிக்கு, பொறுப்பேற்பேர்.

அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், தான் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள இந்த வேளையில், கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் காலப்பகுதியாக அமைந்துள்ளதெனவும் அதனால் மக்களின் தேவைகளை அறிந்து, உரிய சேவையை வழங்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாகவும் கூறினார்.

"வடக்கு மாகாணம் எனக்கு புதிது இல்லை. காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் பிராந்தியங்களில் பொலிஸ் அத்தியட்சகராகவும் மன்னார் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் முன்னர் கடமையாற்றியுள்ளேன்.

"அதனால் வடக்கு மக்களின் மனங்களை நன்கறிந்த நான், சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நடைமுறைப்படுத்தி மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன்" என்றும்  ஜெகத் பளிகக்கார தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X