2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

வடக்குக்கு WHO உதவி

Gavitha   / 2015 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மற்றும் சம்பூர் பிரதேசங்களில் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதை அடுத்து அப்பிரதேசங்களில் மீள்குடியேறிய 1,428 குடும்பங்களுக்கு, 45 நாட்களுக்குப் போதுமான உலருணவுகள், நான்கு மாதங்கள் வரையான செலவுக்கான கொடுப்பனவுகளை வழங்க உலக உணவுத்திட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, 25 வகையான உலருணவுகளை கூட்டுறவு விற்பனை நிலையங்களிலிருந்து பெற்றுக்கொள்வதற்கான காசோலையொன்றை வழங்க நடவடிக்கை எடுத்துள்ள உலக உணவுத் திட்டம், மீள்குடியேற்றப் பிரதேசங்களின்  உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக உதவும் அனைத்துத் தரப்பினருக்கும் நாட்சம்பளத்தை வழங்களும் நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 1,194 குடும்பங்களும் சம்பூரில் 234 குடும்பங்களும் மீள்குடியேறியுள்ள நிலையில், அக்குடும்பங்களுக்கே  மேற்படி உலக உணவுத் திட்டத்தின் உதவிகள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .