2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வடக்கின் கண்ணிவெடி அகற்றும் திட்டத்துக்கு ஜப்பான் உதவி

George   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் கீழ்மட்ட மனித பாதுகாப்பு திட்டத்துக்கான நன்கொடை உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், இலங்கையின் வட பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் திட்டத்துக்கு, 86,399,929 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்ணிவெடி அகற்றும் திட்டமானது ஹெலோ ட்ரஸ்ட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகநுமா மற்றும் ஹெலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு முகாமையாளர் ரொபட் சைபிரட் ஆகியோருக்கடையே, கொழும்பிலுள்ள ஜப்பானியத் தூதுவராலயத்தில் நேற்று வியாழக்கிழமை (01), இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீளத் திரும்பவைத்து அவர்களது இடங்களில் மீளக்குடியமர்த்தல் மற்றும் அவ்வாறு மீளத் திரும்பியவர்களின் விவசாயம் மற்றும் வேறு வாழ்வாதார நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல் போன்றவற்றைத் துரிதப்படுத்தும் பொருட்டு இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் திட்டத்துக்கு உதவும் முக்கிய நன்கொடை வழங்குநராக ஜப்பான் திகழ்கிறது.

வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவதறகாக 2003ஆம் ஆண்டிலிருந்து 28.7 மில்லியன் அமெரிக்க டொலரை ஜப்பான் வழங்கியுள்ளது.

'இவ்வருடத்தில் ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவில் எங்களது அணிகளால் 26 ஹெக்டெயரில் 8,183 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையினால் 800 குடும்பங்கங்களைச் சேர்ந்த 6,645 பேர் மீளத் திரும்பி, வீடு கட்டல், விவசாயம் மற்றும் வேறு வாழ்வாதார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடிந்துள்ளது. இதனால், வடக்கில் சமாதானமும் சௌபாக்கியமும் ஏற்பட்டு இலங்கையர்கள் பயனடைவார்கள்' என ஹெலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு முகாமையாளர் ரொபட் சைபிரட் இதன்போது குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X