Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஜெகநாதன்
போரால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்காக 2016ஆம் ஆண்டு வடமாகாண சபையின் வரவு -செலவுத் திட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் நிதியில் 9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் தொடர்பான அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் கடந்த செவ்வாய்க்கிழமை (15) முதல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், முதலமைச்சருக்கு கீழுள்ள அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விவரத்திலேயே குறித்த நிதியொதுக்கீட்டு விடயமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2015 வரவு-செலவுத்திட்டத்தில்;, 5 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு, வறுமைக்கோட்டுக்குட்பட்ட 8 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன், 1 வீடு திருத்திக் கொடுக்கப்பட்டது.
இம்முறை 4 மில்லியன் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், புதிய வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்பதுடன், வீடுகளுக்கு கன்னார் கூரைத்தகடுகளுக்கு பதிலாக ஓடுகள் போட்டுக் கொடுக்கப்படும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
24 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
3 hours ago