2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வடமராட்சியில் இன்றும் சடலம் கரையொதுங்கியது

Niroshini   / 2021 நவம்பர் 30 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-செந்தூரன் பிரதீபன், எஸ்.நிதர்ஷன், எஸ். தில்லைநாதன், எம்.றொசாந்த் 
 

வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி பகுதியில், இன்று (30), உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று  கரையொதுங்கியுள்ளதாக, பளை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கரை ஒதுங்கியமை தொடர்பில், பொலிஸாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர்.

ஏற்கெனவே கடந்த சனிக்கிழமை, வல்வெட்டித்துறை - மணற்காடு கரையோரத்தில் இரு சடலங்களும் , மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, நெடுந்தீவு கடற்பரப்பில் ஒரு சடலமும் கரையொதுங்கியுள்ள நிலையில், இன்று, மருதங்கேணி கடற்பகுதியிலும் ஒரு சடலம் கரையொதுங்கி உள்ளது. 

கரையொதுங்கிய நான்கு சடலங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியாத நிலையில் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன. 

சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

ஒரு கிழமைக்குள் யாழ். மாவட்டத்தில் கரையொதுங்கிய நான்காவது சடலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X