Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மேல் நீதிமன்ற நியாயாதியாக்குட்பட்ட எல்லைகளில் உள்ள ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த முற்றாகத் தடைசெய்யப்படுவதாக, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (24) உத்தரவிட்டார்.
குடாநாட்டு ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்ளி நடத்துவதற்கு தடை உத்தரவு கோரி, யாழ். மேல் நீதிமன்றில் நீதிப் பிரேராணை மனு இந்து மகா சபையால் முன்வைக்கப்பட்டது.
அதனை சட்டத்தரணி வி.மணிவண்ணன் முன்வைத்திருந்தார்.
இந்த வழக்கு 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.
அன்று தொடக்கம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வேள்வி நடத்தப்படும் ஆலயங்களுக்கு அதனை நடத்துவதற்கு இடைக்காலத் தடையை யாழ். மேல் நீதிமன்றம் வழங்கி வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (24) விசாரணைக்கு வந்தது.
இதன்போது, “ஆலயங்களின் இடம்பெறும் மிருகபலியிடலைத் தடுக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மாகாண மேல் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.
“அதனடிப்படையில், வட மாகாண முதலமைச்சரின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லைக்குள்ள உள்ள ஆலயங்களின் மிருகபலியிட்டு வேள்வியை நடத்த முற்றாகத் தடை வழங்கிக் கட்டளையிடப்படுகிறது.
இந்தக் உத்தரவை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் மல்லாகம் நீதிவான் மன்றுக்கும் வேள்வியை நடத்தும் ஆலயங்களுக்கும், அனுப்பிவைக்க மன்று உத்தரவிடுகிறது” என்று, நீதிபதி உத்தரவிட்டார்.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago