Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 21 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதி உத்தியோகத்தர்கள், நாளை (22) காலை 7 மணி தொடக்கம், 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, வடமாகாண அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் க.ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அரச தாதியர்கள், துணை மருத்துவ சேவையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவே, இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில், அவர் இன்று (21) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“சம்பள முரண்பாடு, பதவியுயர்வு, மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவை, கைவிரல் அடையாள வருகை, பதிவேட்டை நடைமுறைப்படுத்த மேற்கொண்ட தீர்மானத்தை நிறுத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, இந்த தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
“இதற்கமைய, வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதி உத்தியோகத்தர்கள், நாளை (புதன்கிழமை) காலை 7 மணி தொடக்கம் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) காலை 7 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
“நோயாளர்களினதும் பொதுமக்களினதும் நன்மை கருதி, உயிர்காப்பு நடவடிக்கைகளுக்கான அவசர சிகிச்கைக்கு மாத்திரம், தாதி உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுவர். இதேவேளை, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர்களும், நாளை (புதன்கிழமை) காலை 7 மணி தொடக்கம் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவார்கள்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025