2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வடமாகாண பாடசாலைகள் தொடர்ந்து நடத்தப்படுமா?

Freelancer   / 2022 ஜூலை 01 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

வட மாகாண பாடசாலைகளை தொடர்ந்து நடாத்திச் செல்வது தொடர்பில் வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடி  தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் தெரிவித்தார்.

அந்த வகையில் கிராமப்புற பாடசாலைகளை வருகை தரக்கூடிய குறைந்தபட்ச ஆசிரியர்களைக் கொண்டு தொடர்ந்து நடாத்துதல்.

ஏனைய அனைத்துப் பாடசாலைகளிலும் இவ்வாண்டு க.பொ.த சா/த மற்றும் உ/த பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான வகுப்புக்களை சமூகமளிக்கக் கூடிய ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் நடாத்துதல்.

இவ்விடயம் தொடர்பில் பாடசாலை தமது வலயக்கல்விப் பணிப்பாளருடன் கலந்துரையாடி பொருத்தமான முடிவுகளை எடுக்கலாம் என்றார்.

ஆகவே மாணவர்களின் கல்விக்காக தம்மால் இயன்றளவு ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் தன்னார்வமாக வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .