Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 30 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாண மகளிர் விவகார அமைச்சினால் முறைகேடான முறையில் செலவழிக்கப்பட்ட பணம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதுக்கு மூவர் அடங்கிய விசாரணைக்குழுவினை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே நியமித்துள்ளார்.
வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆளுநரிடம் விடுத்த எழுத்து மூலமான குற்றச்சாட்டு தொடர்பாக இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளன.
எதிர்வரும் இரு வாரங்களுக்குள் விசாரணைகளின் அறிக்கையை சமர்பிக்குமாறு ஆளுநர் றெஜினோல்ட் கூரே விசாரணை அதிகாரிகளை பணித்துள்ளார்.
முன்னாள் வட மாகாண ஆளுநர் சந்திரசிறியால் பல்வேறு அமைச்சின் திணைக்களங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி நிதியை வடமாகாண ஆளுநர் சுயேட்சை நிதியத்தின் வங்கி கணக்கில் நிலையான வைப்பிலிட்டு அதன் வட்டிப் பணத்திலிருந்து சிறுநீரகம் மற்றும் இதய சத்திரசிகிச்சை போன்ற நோய்களினால் வடமாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுக்கு ஆளுநர் சுயேட்சை நிதியம் ஊடாக வழங்கப்பட்டது.
ஆயினும் வடமாகாணசபை உருவாக்கப்பட்டதன் பின்னர் அதன் அனைத்து நிதிகளும் அந்தந்த திணைக்களங்களுக்கு மீள் வழங்கப்பட்டது.
மாகாண கணக்காய்வு கூட்டத்தில் இந்த நிதியினை பொருத்தமான திட்டங்களுக்கு மாகாணசபையின் அனுமதியுடன் செயற்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்துக்கு மாறாக மகளீர் விவகார அமைச்சுக்கு வழங்கப்பட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆளுநர் றெஜினோல்ட் கூரே ஆரம்பித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .