2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வடமாகாண சபையில் குழப்பம்

George   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணை     ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு கோரி, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கொண்டு வந்த பிரேரணையால் வடமாகாண சபையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (25) தாமதமாக ஆரம்பமாகியது.

இதன்போது, 8 உறுப்பினர்களின் கையெழுத்துடனான கடிதத்தை பிரேரணையாக முதலமைச்சர் முன்வைத்தார்.

இதன் பின்னர், வடமாகாண சபையில் விவசாய அமைச்சருக்கு எதிராக பிரேரணையைக் கொண்டு வந்த உறுப்பினர்களில் முக்கியமானவரான கேசவன் சயந்தன் சபையில் குழப்பத்தை ஏற்படுத்தினார்.

யோஷித ராஜபக்ஷவுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ சட்டத்தரணியாக நீதிமன்றத்துக்கு வந்ததைப்போல, வடமாகாண விவசாய அமைச்சரின் குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சர் சட்டத்தரணியாக வந்துள்ளார் என சயந்தன் கூறினார்.

அதனை ஆவேசமாக மறுத்த முதலமைச்சர், குற்றச்சாட்டு என்றால் என்ன? சாட்டுதல் என்றால் என்ன? என்பதை முதலில் அறியுங்கள். நீங்கள் முன்வைத்தது சாட்டுதல், குற்றச்சாட்டு அல்ல என கடுமையான தொனியில் பதிலளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X