2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வடமாகாண வீதிகளை புனரமைக்க 32 பில்லியன் ரூ‌பாய் தேவை

Niroshini   / 2017 ஜனவரி 24 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“வடமாகாணத்தில் உள்ள வீதிகளை புனரமைப்பதற்கு சுமார் 32 பில்லியன் ‌‌‌ரூபாய்க்கும் மேற்பட்ட நிதி தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது” என்று வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், மாகாண சபை என்பவற்றுக்ச் சொந்தமான ஏராளமான வீதிகள்,  மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றன.

இது தொடர்பில், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனிஸ்வரன் கருத்துத் தெரிவிக்கும் போது, “வடமாகாணத்தில் எமது திணைக்களத்தின் சுமார் 2,120 கிலோமீற்றர் நீளமான வீதிகள் காணப்படுகின்றன. அத்துடன்,  உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச சபைகள் என வடமாகாண முதலமைச்சரின் கீழ் உள்ள திணைக்களங்களுக்குச் சொந்தமாக 7,000 கிலோமீற்றர் வரையான  வீதிகள் காணப்படுகின்றன.

தற்போது, ஒருசில வீதிகள் 454 மில்லியன்   ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் பல வீதிகள் ஐ.றோட் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளன. சகல வீதிகளையும் புனரமைப்பதற்கு சுமார் 32 பில்லியன் ரூபாய் நிதி தேவையாகவுள்ளது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X