2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வடமாகாண வேலையற்ற பட்டதாரிளை பதிவு செய்யுமாறு அறிவிப்பு

Menaka Mookandi   / 2017 மார்ச் 01 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளின் முழுமையான விவரங்களை அறிந்துகொள்வதற்காக, யாழ். மாவட்டச் செயலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு, வடக்கு மாகாணசபைஉறுப்பினர் கனகரட்னம் விந்தன், அறிவித்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக காலவறையறையற்ற தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டும் வரும் வேலையற்ற பட்டதாரிகளை, செவ்வாயன்று (28) சந்தித்துக்கு கலந்துரையாடும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில், தொடர்ந்து கருத்துரைத்த அவர், “வடக்கில் உள்ள மொத்த வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை, முழுமையாகப் பெறவேண்டியுள்ளமையினால், வடக்கில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள், யாழ். மாவட்டச் செயலகத்துக்குச் சென்று, தாங்கள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்” என்றார்.

இதேவேளை, மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கின்ற ஆளுநரும் மாகாண சபையின் பிரதிநிதியாக இருக்கின்ற முதலமைச்சரும், பட்டதாரிகளை பணிகளில் சேர்த்துக்கொள்வது தொடர்பில், எழுத்துமூலமானபதிலை (காலஎல்லை குறிப்பிட்டு) வழங்கினால் மாத்திரமே, தங்களது போராட்டத்தைக் கைவிடுவது பற்றிப் பரிசீலிக்கப்படும் என்று, காலவறையற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

பட்டதாரிகளை பணிகளில் சேர்த்துக்கொள்ளும் போது, போட்டிப் பரீட்சை நடத்தாது நேர்முகத்தேர்வின் தகமையை பரிசீலித்து, பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையில் நியமனம் வழங்குவது தொடர்பில் உறுதிமொழி வழங்க வேண்டும். மேலும் எதிர்காலத்தில் பல்கலைகழகங்களில் இருந்து வெளியேறுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கு அமைவாக, துறைசார் பிரிவுகளில் அவர்களை  அரச சேவையில் உள்ளீர்ப்பதற்கான சட்டரீதியான கொள்கைத் திட்டமிடல்களை கொண்டுவர வேண்டும் என்ற மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே, மேற்படி பட்டதாரிகளால், இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X