Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஜனவரி 20 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்
வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கி மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் நிர்வாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. இளங்கோவன், மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவும், மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆர். வரதீஸ்வரன், மாகாண கல்வி அமைச்சின் செயலாராக மாற்றம் பெற்றுள்ளார்.
அத்தோடு வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பா. செந்தில்நந்தனன், பேரவைச் செயலக செயலாளராகவும், மாகாண ஆளுநரின் செயலாளர், திருமதி சரஸ்வதி மோகனநாதன் சுகாதார அமைச்சின் செயலாளராக மாற்றம் பெற்றுள்ளார்.
அத்தோடு பேரவைச் செயலகத்தின் செயலாளர் பி. குகநாதன், பிரதிப் பிரதம செயலாளர், பொது நிர்வாகத்துக்கு மாற்றம் பெற்றுள்ள இதேவேளை, ஆளுநரின் செயலாளரின் இடத்துக்கு எவருமே நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
58 minute ago
1 hours ago