2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

வட மாகாண அமைச்சுகளின் செயற்பாடுகளை ஆராய விசேட அமர்வு

எம். றொசாந்த்   / 2017 ஜூலை 06 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கான விசேட அமர்வு, இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

வடக்கு மாகாண சபை அமர்வு, கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில், இன்று (06) இடம்பெற்றது.

இதன்போது, வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர், வடக்கு மாகாண அமைச்சுகளின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதுக்கான விசேட அமர்வை ஏற்பாடு செய்யுமாறு கோரினர்.

இந்நிலையில், இவ்விவாதம் தேவையானதா? எப்போது நடத்தலாம் என்பது தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

இதன்போது, உறுப்பினர் ஆ.அஸ்மின், “அமைச்சுகள் தொடர்பாக அறிக்கைகள் எவையும் எமக்குக் கிடைக்கவில்லை. எனவே அவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். விவாதம் தொடர்பாக ‘மாஸ்ரர் பிளான்’ வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சுகளின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கான விசேட அமர்வு, இம்மாதம் 21ஆம் திகதி இடம்பெறும் என அவைத் தவைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X