2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு காப்புறுதித் திட்டம்

Kogilavani   / 2017 ஜனவரி 31 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்நிதர்ஸன்

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு, காப்புறுதித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையின் அமர்வு இன்று, இடம்பெற்ற போது அவையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

“நாட்டின் ஏனைய மாகாண சபைகளில், இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், இதுவரை வடமாகாண சபையில் இத்திட்டம் நடைமுறையில் இல்லை. எனவே, இதனை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளோம். இதற்கமைய, ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு என்பன வழங்கப்படவுள்ளன. வடமாகாண சபையின் நிதியில் இவை வழங்கப்படும்” என, அவர்  கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X