Niroshini / 2021 நவம்பர் 25 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். தில்லைநாதன்
வடமராட்சி, கரணவாய் தெற்கு- மண்டான் வீதியில், இன்று (25) முற்பகல் 11.30 மணியளவில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், இளம்பெண் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளானார்.
வாதரவத்தை பகுதியைச் சேர்ந்த எஸ்.சிவகலா (வயது -30) என்பவரே, இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளானார்.
படுகாயமடைந்தவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில், நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago