Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 08 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மகனின் நோய் குணமாக வேண்டுமாயின், தாலிக் கொடியில் சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறி, போலிச் சாமியார் ஒருவர், வயரை வைத்து, தாலிக்கொடியை நூதனமாகக் களவாடித் தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம், யாழ்ப்பாணம், சுழிபுரம் - பெரியபுலோவில் பகுதியில், கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
பெரியபுலோவைச் சேர்ந்த 14 வயதான சிறுவனொருவன் நோய்வாய்ப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சிறுவனின் தந்தைக்கு அறிமுகமான நபர் ஒருவர், இவர்களின் வீட்டுக்கு வருகைதந்தார்.
இதன்போது, மகனின் பிறந்த திகதி, நேரம் போன்றவற்றைக் கேட்ட அந்த ஆசாமி, மகனுக்கு கடும் தீவிரமான நோய் ஏற்பட்டுள்ளது எனவும், வீட்டில் கும்பம் வைத்து, கும்பத்தில் தாலிக்கொடி ஒன்றை வைத்து பூஜை செய்ய வேண்டும் எனவும், அதன் பின்னர் அத்தாலிக்கொடியை மகனின் உடம்பில் வைத்து வணங்கினால் மட்டுமே, நோய் குணமாகும் எனவும் கூறியுள்ளார்.
அதை நம்பிய குடும்பத்தினர், தம்மிடம் தாலிக்கொடி இல்லாத நிலையில், உறவினர் ஒருவரிடம் சென்று, தாலிக்கொடியைப் பெற்றுவந்து, அவரிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து, வயர் துண்டு ஒன்றையும், அவர் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
இதன்பின்னர், வீட்டில் கும்பம் வைத்து பூஜை நடத்தப்பட்டதன் பின்னர், வெள்ளைத் துணியாலான நகைப் பொட்டலத்தை சிறுவனின் தாயிடம் கொடுத்து, இதை சிறுவனின் உடம்பில் வைத்து வணங்குமாறும், அதன் பின்னர் மூன்றாம் நாள் வீட்டுக்கு கொண்டுவந்து அவிழ்த்து, தாலியை எடுக்குமாறும், அந்நபர் கூறிவிட்டு, பூஜைக்கான கொடுப்பனவையும் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.
இதையடுத்து, குடும்பத்தினர் அன்றைய தினமே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்று மகனின் உடலில் வெள்ளைப் பொட்டலத்தை வைத்து வணங்கிவிட்டு, வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்து அதை அவிழ்த்துப் பார்த்த போது, அதற்குள் வயர் மட்டுமே இருந்துள்ளது.
இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சிறுவனுக்கு, தலையில் இரண்டு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர் குணமாக உள்ளாரென, குடும்பத்தினர் தெரிவித்தனர்.
10 minute ago
25 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
29 minute ago
35 minute ago