2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வயோதிபத் தம்பதியை கட்டிவைத்து பணம், நகை கொள்ளை

Editorial   / 2020 மே 25 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கந்தரோடை - ஆலடி பகுதியில், நேற்று (24) இரவு, வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்துவிட்டு, ஏழரைப் பவுண் நகைகள், பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

 கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பலொன்று, அவர்கள் இருவரையும் மிரட்டி, கட்டி வைத்துவிட்டு, நகைகளையும் பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

 சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X