2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வயோதிபர் மீது தாக்குதல்

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மானிப்பாய் - சுதுமலைச் சந்தியில், இன்று (20) காலை, வயோதிபர் ஒருவர் இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இவ்வாறு இலக்கானவர், யாழ்ப்பாணம் - ஆணைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவரென, பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாயில் உள்ள அந்தோனியார் தேவாலயத்துக்கு வழிபாடு செய்வதற்காக சென்றுக்கொண்டிருந்தபோதே, குறித்த நபர், மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் படுகாயதடைந்த நபர், யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில், ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X