2025 ஜூலை 19, சனிக்கிழமை

வயிற்றுவலியால் முதியவர் உயிரிழப்பு

Niroshini   / 2016 ஜனவரி 04 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தாங்க முடியாத வயிற்று வலி காரணமாக விஷமருந்திய முதியவர், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை (03), சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாவடி வடக்கு, கொக்குவில் பகுதியினை சேர்ந்த கணபதி தம்பித்துரை (வயது 75) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வயிற்று வலியால் மேற்படி முதியவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக பல வைத்தியங்கள் செய்தும் குணமடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே கடந்த 26ஆம் திகதி விஷமருந்தியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X