2025 மே 08, வியாழக்கிழமை

வருத்தம் தெரிவித்தப் பின்னரே வீதிக்கு அனுமதி

Niroshini   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், நடராசா கிருஸ்ணகுமார்

வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில், அச்செழு அம்மன் வீதியைப் புனரமைப்பதற்கான அனுமதி வழங்க வேண்டுமாயின், வீதி அபிவிருத்தி அதிகார சபை தங்கள் தவறுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று, வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்று (23) நடைபெற்றது. இதன்போதே, மேற்கண்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை வீதி அபிவிருத்தி அதிகார சபையால் ஏற்கெனவே கோரப்பட்ட நான்கு வீதிகளுக்கான புனரமைப்புக் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்ககுவதெனவும், ஏகமனதாகத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X