2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வர்த்தக நிலையத்தை உடைத்து கொள்ளை

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 09 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தை உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.

இக்கொள்ளைச் சம்பவம் இன்று (09) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வர்த்தக நிலையத்தின் மேற்கூரையை பிரித்து சி.சி.ரீவி கமெரா இணைப்புக்களை துண்டித்து விட்டு உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் மற்றும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இதன்போது, சுமார் 7 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான  தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் என சுமார் 10 இலட்சம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொள்ளை இடம்பெற்ற போது வர்த்தக நிலையத்தின் பணியாளர்கள் கடையின் பின்புறம் உறக்கத்தில் இருந்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸாரோடு இணைந்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X