Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2017 ஜனவரி 10 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
அச்சுவேலி பொதுச்சந்தையில் கடலுணவுக்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டு அறவிடுவதனால் மீன்விற்பனையில் ஈடுபடும், சைக்கிள் வியாபாரிகள் சந்தை வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதாக கூறி, கலைமதி மீனவர் அபிவிருத்தி சங்கத்தினால், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வலி. கிழக்கு பிரதேச சபையின் செயலாளர் ஆகியோருக்கு திங்கட்கிழமை மகஜர் கையளிக்கப்பட்டது.
விற்பனை செய்யும் இடத்துக்கு 100 ரூபாய், கொண்டு வரப்படும் மீன்களுக்கு தலா 10 ரூபாய் தொடக்கம் 15 ரூபாய் வரை வரி செலுத்துமாறு வற்புறுத்தப்படுவதாகவும், அப்படி செலுத்தாதவர்கள், சந்தையில் மீன் விற்பனை செய்யவேண்டாம் என அச்சுறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்த மகஜர் கடிதத்தில் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பல கிலோமீற்றர் தூரத்தில் இருந்து வரும் மீன் வியாபாரிகள், பெரிதும் பாதிக்கப்படுவதுடன், தொழில் இன்றி முடங்கியுள்ளனர். இதனால் அச்சுவேலி பொதுச்சந்தையில் மீன்வியாபாரிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
பிரதேச சபையின் நடமுறைகளுக்கு ஊடாக மீன்களுக்கான வரி அறவீடு நடமுறைப்படுத்தப்பட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், இவ் விடயத்தில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 minute ago
1 hours ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
1 hours ago
6 hours ago